காஷ்மீர்,
 ஏழை சிறுவர்களை ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள் காஷ்மீர் பிரவினைவாதிகள் என குற்றம் சாட்டினார் காஷ்மீர் முதல்வர் மெகபூபா.
mehbooba
இதுகுறித்து மெகபூபா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தங்கள் குழந்தைகளை வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி படிக்க வைக்கும் பிரிவினைவாதத் தலைவர்கள், காஷ்மீரில் உள்ள ஏழைக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை விரும்பவில்லை.
காஷ்மீர் சிறுவர்கள் கல்வியறிவு பெற்றுவிட்டால், அவர்கள் கல்வீசி தாக்க மாட்டார்கள் என்ற பயம் பிரிவினை வாதிகளுக்கு உள்ளது. இதன் காரணமாக சிறுவர்களை படிக்க விடாமல் வன்முறையில் ஈடுபட பழக்கி வருகிறார்கள்.
இதன் காரணமாக சிறுவர்கள் போலீசாரையும், பாதுகாப்பு படையினரையும் நோக்கி கல்வீசி தாக்கி வருகிறார்கள். இதன் காரணமாக மோதலில் காயமடைந்த ஏழைச் சிறார்கள்,  மருத்துவ வசதி கிடைக்காமல் பலியாக வேண்டும் என்பதே பிரிவினைவாதிகள் நோக்கமாக உளளது.
India Kashmir Protests
அப்போதுதான் காஷ்மீரில் அமைதியின்மை தொடர வேண்டும் என்பது அவர்களின் நோக்கமாக உள்ளது.
பணக்கார குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்கும், பிரிவினைவாதத் தலைவர்களின் வீட்டு சிறுவர்களுக்கும் சிறு காயம் கூட ஏற்படுவதில்லை. காரணம், அவர்கள் வீட்டு பிள்ளைகள் வெளியே வருவதில்லை.
காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி மற்றும் அனைத்துக் கட்சிக் குழுவினர் என அனைத்துத் தரப்பும் மேற்கொண்ட முயற்சிக்கு பலன் இல்லாமல் போனது.
பேச்சுவார்த்தை நடத்த வந்த அவர்களை பிரிவினைவாதிகள் ஒருமுறை கூட சந்திக்கவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.