ஐபிஎல் கோப்பையை திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் வைத்து பூஜை

Must read

 

ஐபிஎல் டி-20 கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாக வென்றது.

துபாயில் நடந்த இறுதிப்பட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையை வென்ற தோனி அதிக வயதில் ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார்.

சிஎஸ்கே அணியின் வெற்றியைத் தொடர்ந்து அணியின் உரிமையாளர் ஸ்ரீநிவாசன் மற்றும் அவரது மகள் ரூபா குருநாத் ஆகியோர் ஐபிஎல் கோப்பையுடன் சென்னை தி. நகரில் உள்ள திருப்பதி வெங்கடேச பெருமாள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

கோப்பையை வெங்கடாசலபதி அருகில் வைத்து பூஜை செய்யப்பட்டது, அப்போது பேசிய ஸ்ரீநிவாசன், தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை, சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லாமல் தோனியும் இருக்கமாட்டார் என்று கூறினார்.

More articles

Latest article