வன்கொடுமை சட்டத்தில் கைதான முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஜாமீன்

Must read

ண்டிகர்

முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சாதி ரீதியாகப் பேசியதாக அரியானா கால்வதுறையால் கைது செய்யபட்டு  ஜாமீனில் வெளி வந்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இன்ஸ்டாகிராம் வீடியோவில் யுவராஜ் சிங் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சாஹலின் டிக்டாக் வீடியோக்களைப் பற்றி விவாதித்தனர். அப்போது யுஸ்வேந்திர சாஹல் சாதி குறித்து அவதூறாக பேசியது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. பெரும் விமர்சனத்துக்குள்ளானது.

இதையொட்டி யுவராஜ் சிங் தனது ட்விட்டர் கடந்த ஆண்டு பகிரங்க மன்னிப்பு கோரினார். இது குறித்து ‘‘நான் எனது நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த போது, தேவையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி விட்டேன். ஒரு பொறுப்பான இந்தியனாக நான் வேண்டுமென்றே யாருடைய உணர்வுகளையாவது காயப்படுத்தியிருந்தால், நான் வருத்தத்தைத் தெரிவிக்க விரும்புகிறேன்’’ என கூறியிருந்தார்

ஹரியானா தலித் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின் கீழ் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் யுவராஜ் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற உத்தரவின் பேரில் முதல் தகவல் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.  நேற்று இரவு அவர் கைது செய்யப்பட்டார்.

காவல்துறையினர் அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். தாம் கூறியது தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டதாகவும் மன்னிப்புக் கேட்பதாகவும் யுவராஜ் சிங் கூறியுள்ளார்.  ஏற்கனவே அவர் மன்னிப்பு கோரியிருந்ததால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

More articles

Latest article