சென்னை:
ன்று முதல் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வழங்கப்படும் என்றும் ரேசன்கடை அதிகாரிகள் வீடு தேடி டோக்கன்களை வழங்குவார்கள் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பணம் ரூபாய் 1000 மற்றும் பொங்கல் பொருள்கள் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த பொங்கல் பரிசை வாங்குவதற்கான டோக்கன்கள் இன்று முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை வழங்கப்படும் என்றும் ரேஷன் கடை அலுவலர்கள் வீடு வீடாக சென்று பொங்கல் தொகுப்பிற்கான விநியோகம் செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என்றும் அமைச்சர்கள் அந்தந்த மாவட்டத்தில் தொடங்கி வைப்பார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.