கடலூர்:
வேப்பூர் அருகே அடுத்தடுத்து தனியார் பேருந்து, 2 லாரிகள், 2 கார்கள் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் எல்லையில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரிய செலூர் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை சாலையோரத்தில் கார் நிறுத்தப்பட்டு இருந்துள்ளது. இந்த நிலையில் அவ்வழியாக வந்த லாரி நின்று கொண்டிருந்த காரின் மீது அதிவேகமாக மோதியது. அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி இந்த திடீர் விபத்தில் 2 இரண்டு சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 2 பெண்கள், 2 குழந்தைகள், ஓட்டுனர் உட்பட 5 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.