சென்னை:

டைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் திருவாரூருக்கும் ரூ.1000 உடன் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

தமிழகம் முழுவதும் இன்றுமுதல்  அனைத்து ரேசன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், திருவாரூர் தொகுதியில் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், பொங்கல் பரிசு பை வழங்க தடைவிதிக்கப்பட்டு இருந்தது.அங்கு தேர்தல் முடிந்தபிறகு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று  தேர்தல் ஆணையம், திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளது. இந்த நிலையில், திருவாரூர் தொகுதிக்கும்  ரேசன் கடைகள் மூலம் ரூ.1000 உடன் பொங்கல் பரிசு தொகு   விநியோகிக்கப்படும்  என்றும் தெரிவித்து உள்ளது.

திருவாரூரில்  தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டதால் பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்து வருகிறது

அதன்படி,  பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் உடன் , 1 கிலோ பச்சிரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பொங்கல் பை அனைத்து  கார்டுதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்பபடும்.