சென்னை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 16,932 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 16,932 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும், வரும் 12 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் சேவை தொடங்கும் எனவும் கூறினார்.