சென்னை:
2023-ம் ஆண்டுக்கான +2 பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு 8 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். அதன்படி, பிளஸ் 2 மாணவர்களுக்கு அடுத்த மாதம் செய்முறைத் தேர்வு தொடங்குவதால் ஹால் டிக்கெட் இன்று இணையத்தில் வெளியிடப்பட உள்ளது.

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று பிற்பகல் 2 மணி முதல் https://dge1.tn.gov.in, https://dge1.tn.gov.in என்ற தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை பள்ளிகள் பதிவிறக்கம் செய்த பின்னர் மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 1 மாணவர்களுக்கு வரும் மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரையிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.