நெஞ்சை பதற வைக்கும் பொள்ளாச்சி பாலியல் கொடுமை: வாலன்டியராக வந்து சிக்கிய பொள்ளாச்சி ஜெயராமன்…

சென்னை:

முகநூல் மூலம் நட்பை ஏற்படுத்தி, நூற்றுக்கணக்கான பெண்களை மிரட்டி, பாலியல் வன் கொடுமை செய்து தொடர்பாக வெளியான  வீடியோக்களின் பல இளம்பெண்களின் மரண ஓலங்கள்.. நெஞ்சை பதற வைக்கின்றன…

இந்த சம்பவங்களுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். இது பல்வேறு யூகங்களை கிளப்பி உள்ளது.

பொள்ளாச்சி பகுதியில்  சில ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான பெண்களை மயக்கியும், மிரட்டியும் பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோவாக எடுத்துள்ள சம்பவம் சமீபத்தில் வெளி யானது. இளம்பெண் ஒருவர் அந்த கும்பலிடம் இருந்து அலறியடித்து தப்பித்து மரண ஓலமிட்ட நெஞ்சை உறைய வைக்கும் சம்பவங்கள் வெளியாகி உள்ளன.  இது தொடர்பாக வெளியாகி உள்ள சில வினாடிகள் ஓடும்  வீடியோவில் பல இளம்பெண்கள் சிக்கிக்கொண்டு தவிக்கும் காட்சிகள்  மனதை உலுக்குவதாக உள்ளது.

தமிழகத்திலா  இந்த கேவலமான அவலங்கள் நடந்துள்ளது என்பதை கேட்கும் ஒவ்வொருவரும் பதறி துடிக்கின்றனர். இந்த கொடூர செயல்களை அரங்கேற்றியவர்களை கூண்டோடு சுட்டுக் கொல்லவேண்டும் என்று சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று,  அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, திரையுலகினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

இந்தக் கொடூர சம்பவத்தின் பின்னணியில் ஆளுங்கட் சியைச் சேர்ந்தவர்கள் துணையாக இருக்கும் தகவல்கள் தற்போது வெளியாகி வருகிறது.  பொள்ளாச்சி சரகத்தை சேர்ந்த அதிமுக பிரபலங்கள் மீதும் குற்றச்சாட்டுக்கள் வீசப்பட்டு வருகின்றன.

புகார் கொடுத்த பெண்ணை ஆளுங்கட்சி பிரமுகர்கள் மிரட்டி இருப்பதும், புகாரை வாபஸ் வாங்க அவர்களது குடும்பத்தினரை பல தரப்பில் இருந்து வலியுறுத்தி வருவதும் தெரிய வந்துள்ளது. அதை மெய்ப்பிக்கும் வகையில், பொள்ளாச்சி ஜெயராமன், தங்களுக்கும் அந்த சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்து உள்ளார். 

ஆனால்,  200க்கும் மேற்பட்ட பெண்களை கற்பழித்து சீரழித்த கும்பலில் ஒருவனான பார் நாகராஜன் என்பவன், அதிமுக கட்சியை சேர்ந்தவன்.  பொள்ளாச்சி  ஜெயலலிதா பேரவை செயலாளர் பதவியில் இருந்து வருகிறான்.. அவரை தற்போது அதிமுக கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதுபோல, புகார் கொடுத்த  பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டன் என்பவர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதுவும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பான வழக்கில்,  விவரங்களை தாக்கல் செய்ய அரசுத் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு  விசாரணை 14ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்கும் தனது குடும்பத்திற்கும் எந்தச் சம்பந்த மும் இல்லை எனச் சட்டமன்றத் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். இது என் அப்பன் குதிருக்குள் இல்லை என்பதைப்போல் உள்ளது.

ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் 1ந்தேதி, தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெய ராமனின் மகன் பிரவீன் (வயது 18)  ஒரு இளம்பெண்ணை அழைத்துக்கொண்டு நண்பர்க ளுடன் காரில் சென்றபோது, அவர்களது கார் அவிநாசி அருகே பெருமாநல்லூர் ஆதியூர் பிரிவு புறவழிச்சாலை யில் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளாது.

இந்த விபத்தில் பிரவீனின் காரில் பயணம் செய்த சுரேகா (18) என்ற இளம் பெண் பலியானார். அந்த இளம் பெண் யார், அவரை ஏன் இளைஞர்கள் அழைத்துச்சென்றனர் விவரங்கள் அனைத்தும் அப்படியே முடக்கப்பட்டது. அந்த பெண்ணை பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்தான் அழைத்துச் சென்றதாக கூறப்பட்டது.

பொள்ளாச்சி ஜெயராமன் மகன் அழைத்துச்சென்ற பெண் பலியான கார் விபத்து (பைல் படம்)

அப்போதும், அந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுக்கவே அந்த கும்பல் அழைத்துச்சென்றதாகவும், எதிர்பாராத விபத்தில் சிக்கி அந்த பெண் பலியானதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடத்தாமல், அரசியல் செல்வாக்கு காரணமாக வழக்கு முடிக்கப்பட்டது.

தற்போதும், அதுபோலவே ஒரு இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தபோதுதான்… இந்த பதபதைக்கும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.  இதுகுறித்து  விரிவான விசாரணை மேற்கொண்டால், பொள்ளாச்சி ஜெயராமன் மகனின் உண்மை முகம் வெளிப்படும்.

அதனால்தான் பொள்ளாச்சி ஜெயராமன் அலறியடித்துக்கொண்டு, தன்மீதும், தனது குடும்பத்தினர் மீதும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர், தேர்தலை மனதில்கொண்டு சொல்வதாகவும் செய்தியாளர்களிடம்  தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே பொள்ளாச்சி பகுதியில் பல இளம்பெண்கள் உள்பட குடும்ப பெண்களும் தற்கொலைகள் செய்துள்ள நிலையில், அவர்களின் தற்கொலைக்கு இந்த பாலியல் வன்கொடுமை காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக தற்கொலை செய்துகொண்ட வர்கள் குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிகக்கைகள் வலுத்து வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் சிக்கிய பாலியல் வன்கொடுமை கும்பலுக்கு பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்  பிரவீன்தான் தலைமை என்று தகவல்கள் பரவி வருகின்றன. 

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு என்ற இளைஞர், போலீசிடம் சிக்கும் முன்பு, வாட்ஸ்அப் ஆடியோ மூலம் வெளியிட்ட தகவலில், தனக்கு பின்னணியாக முக்கிய அரசியல் பிரமுகர் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

தற்போது பாலியல் கும்பலை காவல்துறை பிடித்து வைத்துள்ள நிலையில், அவர்கள்மீது குண்டர் சட்டம் போடப்படும்என்று காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். இது வெறும் கண்துடைப்பு என்று பொதுமக்களும் எதிர்க்கட்சியினரும் குற்றம் சாட்டி உள்ளனர்.  அவர்கள்மீது தீவிர நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்கி வருகிறது.

பொள்ளாச்சி ஜெயராமன் மகன் அழைத்துச்சென்ற பெண் பலியான கார் விபத்து (பைல் படம்)

கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசு வாட்ஸ்அப் ஆடியோவில் தெரிவித்திருந்தபடி, அந்த  முக்கிய நபர் யார் என்று பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இது சம்பவங்ங்கள் எடப்பாடி தலைமையிலான அரசுக்கும், தமிழக காவல்துறைக்கும் பெரும் தலைகுனிவு என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதன் தாக்கம் நடைபெற உள்ள நாடாளுமன்ற மன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் எதிரொலிக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்த விவகாரத்தில், தமிழகஅரசு தீவிர நடவடிக்கை எடுக்க தயங்கினால்  தி.மு.கழகம் சட்ட ரீதியாகவும் மக்கள் மன்றத்திலும் தனது போராட்டத்தை மேற்கொள்ளும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: dmk leader stalin c, pollachi facebook sex, Pollachi Jayaraman, pollachi sexual-harassment, Pollachi's Sexual Harassment:
-=-