லக்னோ: அரசியல் என்பது மக்களுக்கு சேவை செய்வது, அவர்களை கார் ஏற்றி கொல்வதற்கு அல்ல என, மத்திய அமைச்சரின் மகன் விவசாயிகள் மீது வண்டியை ஏற்றி கொலை செய்த விவகாரம் குறித்து மாநில பாஜக தலைவர் கடுமையாக  விமர்சித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில், லகிம்பூர் கேரி பகுதியில் கடந்த 3-ந் தேதி  அன்று போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விவசாயிகள் மீது, மத்திய உள்துறை  அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் மோதிவிட்டுச் சென்றது. இதையடுத்து வன்முறைக்களமாக அந்த பகுதி மாறியது. இதில், 4 விவசாயிகள் 4 பாஜகவினர், பத்திரிகையாளர் ஒருவர் என மொத்தம் 9 பேர் பலியாகினர். இநத விவகாரம் நாடு முழுவமுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பின்னர் உச்சநீதிமன்றத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, மத்தியஅமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய, மாநில பாஜக அரசின் நடவடிக்கைகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.

இந்த நிலையில், லக்னோவில் உள்ள அறிவியல் கன்வென்ஷன் சென்டரில் பாஜக சிறுபான்மை பிரிவின் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடை பெற்றது. இதில் உரையாற்றிய உத்தரபிரதேச (உபி) பாரதீய ஜனதா தலைவர் சுயேந்திரா தேவ் சிங்,  “அரசியலில் சேருவது என்பது ஊழலில் ஈடுபடுவது அல்லது மக்களை கொள்ளையடிப்பது அல்ல என்று கூறியதுடன்,  ஃபார்ச்சூனரின் கீழ் மக்களை நசுக்க வேண்டும் (காரைக்கொண்டு விவசாயிகள் மீது ஏற்றி கொன்றது)  என்று அர்த்தமல்ல என்று காட்டமாக விமர்சித்தார்.

உங்கள் நடத்தை வாக்குகளை பெறும் நம்பிக்கையை இழக்கும் என்று கூறியதுன்  நீங்கள் செல்லும் பாதையின் மக்கள் உங்களைப் பாராட்டினால் நான் மகிழ்ச்சியடைவேன். அதற்காகத்தான  நாங்கள் கட்சியில் வேலை செய்கிறோம். .. அண்டை வீட்டாரைப் பயமுறுத்தி பார்ப்பதற்கல்ல என்று கூறினார்.

மத்திய அமைச்சர் மகன் ஆசிஷ் மிஷ்ரா தனது பார்ச்சுனர் காரைக்கொண்டு விவசாயிகள் மீது ஏற்றி கொலை செய்ததை கடுமையாக விமர்சித்துள்ளார். மாநில பாஜக சிறுபான்மை பிரிவு தலைவரின் தலைமைக்கு எதிரான பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.