அரசியல் கட்சி: ரசிகர்களுடன் கமல் திடீர் ஆலோசனை!

சென்னை,

னது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் கமலஹாசன் இன்று தனது இல்லத்தில் திடீர் ஆலோசனை மேற்கொண்டார்.

சமீப காலமாக மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வரும் நடிகர் கமலஹாசன் மக்களுக்காக முதல்வர் பதவி ஏற்க தயார் என்றும் , அரசியலுக்கு வருவேன் என்றும் கூறி உள்ளார்.

ஏற்கனவே தனது அரசியல் பிரவேசம் குறித்து கேரள முதல்வர் பிரனாயி விஜயனிடமும், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடனும் ஆலோசன செய்துள்ள கமல் தற்போது தனது  ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் திடீர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த ஆலோசனையின்போது கட்சியின் பெயர் மற்றும் கொடி குறித்தும், கட்சியின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து தனது ரசிகர் மன்றத்தினரை டெங்கு ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்தும் தனது அரசியல் பிரவேசம் குறித்து தனது ரசிகர்களிடையே ஆலோசனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Political party: Actor Kamal Hassan sudden meets with fans