நானே ஜெ.வின் வாரிசு: சான்றிதழ் கேட்டு கிண்டி வட்டாட்சியரிடம் ஜெ.தீபக் மனு!

ஜெயலலிதாவுக்கு இறுதி சடங்கு செய்யும் தீபக்

சென்னை,

றைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசாக தன்னை அறிவிக்கும்படி  கிண்டி வட்டாட்சியரிடம் தீபக் மனு செய்துள்ளார்.

தமிழக முதல்வராக இருந்த செல்வி ஜெயலலிதா திருமணம் செய்யாமல் வாழ்ந்து வந்தார். அவர் உயிருடன் இருந்தவரை அவரது உறவினர்கள் யாரும் அவரை கவனிக்காத நிலையில், சசிகலா குடும்பத்தினர் அவருடன் இருந்து வந்தனர்.

ஜெயலலிதா மறைந்ததும், அவரது அண்ணன் மகன் மற்றும் மகள் ஜெ.வின் சொத்துக்கு உரிமை கோரி வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 22ந்தேதி உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் 5ந்தேதி மரணம் அடைந்தார்.

அப்போது ஜெயலலிதாவின் இறுதி சடங்குகளை ஜெ.வின் ரத்த உறவினரான ஜெ.தீபக் சசிகலாவுடன் இணைந்த செய்தார்.

இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசாக தம்மை அறிவிக்குமாறு, கிண்டி வட்டாட்சியரிடம் தீபக் வாரிசு சான்று கேட்டு மனு அளித்துள்ளார்.

இந்து மத சட்டப்படி இறந்தவருக்கு இறுதி சடங்கு செய்பரே வாரிசு என கருதப்படுவர். எனவே,  ஜெயலலிதாவிற்கு நான்தான் இறுதி சடங்குசெய்தேன். எனவே, ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு நானே வாரிசு. எனவே, தனக்கு ஜெயலலிதாவின் வாரிசு என்று சான்றிதழ் தர வேண்டும் என  வாரிசு சான்றிதழ் கேட்டு தீபக் விண்ணப்பித்துள்ளார்.

ஜெ. வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை தமிழக அரசு நினைவிடமாக அறிவித்துள்ள நிலையில், தீபக் வாரிசு சான்றிதழ் கேட்டு மனு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
I am the heir of Jayalalithaa: Deepak petition to Guindy Taluk office