துரை

நாளை மறுநாள் (ஜூன் 22) நடிகர் விஜய்க்கு பிறந்தநாள். இதையடுத்து அவரது ரசிகர்கள் தமிழகம் முழுதும் நலத்திட்ட விழாக்கள் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இது ஓகேதான்.

ஆனால், விஜய்யை வாழ்த்தி அடித்துள்ள சில போஸ்டர்கள், எழுதப்பட்டுள்ள சுவர் வாசகங்கள் ஆகியவைதான் கட்சிகளை கடுப்பேற்றியிருக்கின்றன.

மதுரை ரசிகர்கள், “கழகத்தின் எண்ணிக்கை குறையவில்லை, மக்களின் வாழ்க்கைதரம் உயரவில்லை. உங்களின் தலைமையின்றி இனி வேறு வழியும் இல்லை” என்று போஸ்டர் அடித்திருக்கிறார்கள்.

தவிர, “கழகத்தின்” என்ற வார்த்தையில் தமிழகத்தின் முன்னணி கட்சி கொடிகளின் நிறங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த போஸ்டர் தற்போது சமூகவலைதளங்களிலும் உலாவருகிறது.

போஸ்டர் டிசைனையும், வார்த்தைகளையும் பார்த்த கட்சியினர் விஜய் ரசிகர்கள் மீது ஏக ஆத்திரத்தில் இருக்கிறார்கள். அவர்களில் பலர், விஜய் மற்றும் அவரது ரசிகர்களை கடுமையாக விமர்சித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

[youtube-feed feed=1]