சென்னை:
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதியைக் கொன்றவன் என்று காவல்துறை வெளியிட்ட வீடியோவில் இருப்பவர் உண்மையிலேயே குற்றவாளிதானா என்கிற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் மர்ம நபரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது நாடு முழுதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
s
இந்த நிலையில், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு அருகில் தனியார் வைத்திருந்த சி.சி. டி.வி. கேமராவில், பதிந்த ஒரு உருவத்தை கொலையாளி என காவல்துறையினர் ஊடகங்களுக்கு அளித்தனர்.   பிறகு அந்த நபர்தான் குற்றவாளி என்று புதிதகவும் ஒரு வீடியோவை அளித்தனர்.
download
ஆனால் அந்த நபர் கொலையாளியாக இருப்பாரா என்கிற சந்தேகம் எழுப்பப்படுகிறது.
“அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் சுவாதி. அவரது தாடைப்பகுதி முற்றிலுமாக சிதைந்து ரத்தம் பீறிட்டிருக்கிறது. அவர் விழுந்த இடம் முழுதும் ரத்தமாக இருக்கிறது.  அப்படியானால் கொலையாளியின் சட்டையில் ரத்தக்கறை நிச்சயமாக இருக்கும். ஆனால் போலீஸ் அளித்துள்ள வீடியோவில் இருக்கும் நபரின் சட்டையில் ரத்தக்கறையே இல்லை” என்று சந்தேகம் எழுப்பப்படுகிறது.

ருத்தரன் முகநூல் பதிவு
ருத்தரன் முகநூல் பதிவு

இதே சந்தேகத்தை பிரபல மனநல மருத்துவர் ருத்ரன் தனது முகநூல் பக்கத்தில் எழுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
காவல்துறை தரப்பில், “கொலை நடந்த நேரத்துக்கு முன்பு ரயில்வே நிலையத்துக்கு கொலையாளி வரும்போது பதிவான வீடியோ அது” என்று சொல்லப்படுகிறது.
அப்படியானால் வீடியோ பதிவில் உள்ளவர்தான் கொலையாளி என்று எப்படி முடிவு செய்ய முடியும் என்ற கேள்வி எழுகிறது. இதற்கு பதிலாக “பல கோணத்தில் விசாரித்துக்கொண்டிருக்கிறோம். விரைவில் கொலையாளியை பிடித்துவிடுவோம்” என்று மட்டும் பதில் வருகிறது போலீஸ் தரப்பில் இருந்து.