சென்னை:

மோடி மஸ்தான் என்ற பாடலை பாட இசைக்குழுவுக்கு சென்னை போலீஸார் அனுமதி மறுத்தனர்.

இசைக் குழுவினருடன் நடிகர் கார்த்தி.

சென்னை பெசன்ட் நகரில் நடந்த சென்னை கலைத் தெரு விழாவின் ஒரு அங்கமாக தென்மா தலைமையிலான இசைக்குழுவின் நிகழ்ச்சியும் நடந்தது.

இதில் மோடி மஸ்தான் என்ற பாடலை இசைக் குழுவினர் பாடினர். பாடல் அரசியல் குறித்தும் இருந்தது. பிரதமர் மதுரை வருகையை எதிர்த்து ட்விட்டர் போர் நடந்த தினத்தில் இந்த நிகழ்ச்சியும் நடந்ததால், போலீஸார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியிருந்தனர்.

கஜா புயலுக்கு தேவையான நிதியை ஒதுக்காத மோடியே திரும்பிப் போ என கோஷம் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து இருந்தது.
இந்த சூழலில் மோடி குறித்த பாடல் போலீஸாருக்கு உறுத்தலாக இருந்தது.

உடனே இந்த பாடலை நிறுத்துமாறு ஒரு உயர் அதிகாரி உத்தவிட்டார். பார்வையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தும் பாடல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

இது குறித்து விளக்கம் அளித்த போலீஸார், வகுப்புவாத மற்றும் சாதி தொடர்பான நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்ற நிபந்தனையுடன் தான் கலை நிகழ்ச்சிக்கு அனுமதி தரப்பட்டது. இதன் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றனர்.