சென்னை:

2019-ம் ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு வினாத்தாள் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


கோடிட்ட இடத்தை நிரப்புக, பொருத்துக போன்ற கேள்விகள் மாற்றியமைக்கப்பட்டு, பல வாய்ப்பு கேள்விகளாக பார்ட்-ஏ( ஒரு மார்க் கேள்விகள்) மாற்றப்பட்டுள்ளன.

சில நாட்களுக்கு முன்பு கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான மாநில கவுன்சில் மாதிரி வினாத்தாளை வெளியிட்டபோது, இந்த மாற்றம் செய்யவில்லை.

பிளஸ்-2 பொதுத் தேர்வு வரும் மார்ச் 1-ம் தேதி தொடங்குகிறது. புதிய பாடத்திட்டத்தையே மாணவர்கள் படிக்கின்றனர்.

இந்நிலையில், புதிய வினாத் தாள் முறையால் ரிசல்ட் பாதிக்கும் என்ற அச்சம் மாணவர்கள் மத்தியில் உள்ளது.

ஒவ்வொரு பாடத்துக்கும் 200 மதிப்பெண்ணிலிருந்து 100 மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தேர்வு நேரமும் 30 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.