கும்முடிப்பூண்டி: ஓடும் ரயிலில் சாகசம் செய்த மாணவன் மற்றும் மாணவியை நேரில் அழைத்து  காவல்துறை எஸ்.பி. அட்வைஸ் செய்து எச்சரிக்கை செய்ததுடன்,  அவர்களின் பெற்றோர்களுக்கும் அறிவுரை வழங்கினார்.

சென்னை புறநகர் ரயில்களில் கல்லூரி மாணவர்களிடையே மோதல்கள் நடைபெறுவது தொடர்கதையாக நடைபெற்று வருவதுபோல, கல்லூரி மாணவர்கள் கையில் கத்தியுடன் நடமாடுவதும், நடைமேடைகளில் பொறிபறக்க தேய்த்து பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதும் தொடர்கிறது. இந்த தொடர்கதையில் தற்போது மாணவிகள் சிலர் சேர்ந்துள்ளதும் அதிர்ச்சி அளிக்கிறது.

சமீபத்தில்,  திருவள்ளூர் மாவட்டம் அடுத்த கும்மிடிப்பூண்டி கவரப்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் புறப்படும் நேரத்தில் பள்ளி சீருடையில் ஓடி வந்த ஒரு மாணவி வேகமாக நகரும் ரயிலில் ஏறினார். அதுமட்டுமின்றி ரயில் சென்றுகொண்டிருக்கும்போது தனது காலை நடை மேடையில் வைத்து உரசியபடி சென்றார். அவரைப் போலவே பள்ளி சீருடையில் வந்த மாணவர் ஒருவரும் செய்தார்.

இதுதொடர்பான வீடியோ வெளியாகி கண்டனத்தை பெற்றது. இதை கண்ட பலர் அதிர்ச்சி தெரிவித்தனர். பலர் கண்டமுனம் தெரிவித்தனர்.

இதையடுத்து, வீடியோவை ஆய்வு செய்த காவல்துறையினர்,  அவர்கள் இருவரும் கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட எஸ்பி வருண் குமார், மாணவி மற்றும் மாணவனை அவர்களது பெற்றோர்களுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து அறிவுரை கூறினார்.

மேலும் இதுபோன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபடாதவாறு பள்ளிகள் கட்டுப்படுத்த வேண்டும். மேலும்  ஒழுங்கின நடவடிக்கை எடுக்கும் மாணவர்கள் மீது, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.