பெங்களூர் துப்பாக்கி சூட்டில் மேலும் ஒருவர் சாவு

Must read

பெங்களூரு:
பெங்களூருவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காயம் பேட்ட மேலும் ஒருவர் இன்று உயிரிழந்தார்.
காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் வன்முறை தலைவிரித்தாடுகிறது. தமிழர் பதிவெண் கொண்ட வாகனங்கள் எரிக்கப்படுகின்றன. தமிழர்களின் வணிக நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்படுகின்றன.
நேற்று பெங்களூருவில் பெரும் வன்முறை வெறியாட்டத்தை நடத்தினர் கலவரக்காரர்கள். அவர்கள் ஒடுக்க காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மூன்று பேர் மீது குண்டு பாய்ந்தது. அவர்களில் ஒருவர் நேற்று இரவு உயிரிழந்தார்.
untitled-1-1
இந்நிலையில் இன்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த குமார் என்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி மதியம் உயிரிழந்தார். இது வரை  துப்பாக்கி சூட்டுக்கு இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.

More articles

Latest article