தீபா வீட்டு போலி ரெய்டில் மாதவனுக்கு தொடர்பில்லை….போலீஸ் தகவல்

சென்னை:

தீபா வீட்டிற்கு ரெய்டு நடத்த போலி அதிகாரி சென்ற சம்பவத்தில் மாதவனுக்கும் தொடர்பு இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணண் மகள் தீபாவின் வீட்டிற்கு வருமான வரித்துறை அதிகாரி என்று கூறிக் கொண்டு வாலிபர் ஒருவர் சென்றார். ரெய்டு நடத்த வந்திருப்பதாக தெரிவித்த அந்த நபர் மீடியாக்களை பார்த்து தப்பியோடினார்.

அவரது புகைப்படத்தை கொண்டு போலீசார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் பிரபாகரன் என்ற வாலிபர் இச்சம்பவம் தொடர்பாக மாம்பலம் போலீசில் சரணடைந்தார். ரெய்டு நடத்த தீபா கணவர் மாதவன் தான் காரணம் என்று பிரபாகரன் கூறியதாக செய்திகள் வெளியானது.

ஆனால் இதை போலீசார் மறுத்துள்ளனர். பங்கு சந்தையல் நஷ்டம் ஏற்பட்டதால் பணம் பறிக்க இச்செயலில் ஈடுபட்டதாக பிரபாகரன் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags: Police says there is no link for madfhavan in Deepa house raid incident, தீபா வீட்டு போலி ரெய்டில் மாதவனுக்கு தொடர்பில்லை....போலீஸ் தகவல்