‘கோலா’ என்ற தலைப்பில் உருவாகியிருக்கும் படத்தை மோத்தி.பா என்ற காவல் துறை அதிகாரி கதை எழுதி இயக்கியிருக்கிறார். மோத்தி ஆர்ட்ஸ் சார்பில் மோத்தி முகமது இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

விக்கி ஆதித்யா, சைவாக் ஆகியோர் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஹரியின் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இவர்களுடன் மோத்தி முகமது, தருண் மாஸ்டர், பாபூஸ், சந்தான லக்‌ஷ்மி, ஜீவா ரவி, ஜெய சுவாமிநாதன், கிருஷ்ணன், குமார், ஜெய்கணேஷ், அமுதவாணன், ஜுங்கா பாலா, ஸ்ரீகோ உதயா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு கமில் ஜே.அலெக்ஸ் ஓளிப்பதிவு செய்ய, கண்மணி ராஜா இசையமைத்திருக்கிறார். எஸ்.எம்.பிரஷாந்த் பின்னணி இசையமைத்திருக்கிறார். காதல் மதி, டாக்டர் கிருதியா, மோத்தி.பா ஆகியோர் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். ராம்ஜி கலையை நிர்மாணிக்க, ராதிகா நடனம் அமைத்திருக்கிறார். தீபக் எடிட்டிங் செய்திருக்கிறார்.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இயக்குநர் கே.பாக்யராஜ், கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்