கூவத்தூர் “எம்.எம்.எல்.ஏ. ஹாஸ்டலில்” அதிரடிப்படையினர்  நுழைந்தனர்

Must read

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவின் கண்காணிப்பில் கூவத்தூர் நட்சத்திர ஓட்டலில் கணிசமான எம்.எல்.ஏக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  இந்த ஓட்டல் தற்போது “எம்.எல்.ஏ. ஹாஸ்டல்” என்று செல்லமாக அழைக்கப்படுகிறது.  நேற்று மூன்றாவது முறையாக இங்கு வந்த சசிகலா, நேற்று இரவு இங்கேயே தங்கினார்.

இந்த நிலையில் இன்று காலை வெளியான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என  உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

நேற்று காலையில் இருந்தே இந்த பகுதியில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஐந்து மாவட்ட கண்காணிப்பாளர்கள் தலைமையில் ஐநூறு காவலர்களுக்கு மேற்பட்டவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த பகுதி முழுதுமேகாவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. செய்தியாளர்கள் மீது ஏற்கெனவே சசிகலா ஆதரவு குண்டர்கள் தாக்குதல் நடத்தியதால், செய்தியாளர்களை  பாதுகாப்பாக தனியிடத்தில்காவல்துறையினர் வைத்துள்ளனர்.

தற்போது, சசிகலா முதல்வராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சசிகலா தரப்பி்ல் வேறு ஒருவரை முதல்வராக முன்னிறுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், அதிரடிப்படையின் அந்த ஓட்டலுக்குள்  அதிரடியாக நுழைந்திருக்கிறார்கள். ஏற்கெனவே இந்த எம்.எல்.ஏக்கள் சட்டத்துக்குப் புறம்பாக அடைத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற புகார் எழுந்துள்ளதால் எம்.எல்.ஏக்களை மீட்டு அவரவர் தொகுதிக்கு அனுப்பி வைக்கப்படலாம் என்று  சொல்லப்படுகிறது.

அப்படி நடந்தால் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள், ஓ.பி.எஸ். பக்கம் வரக்கூடும்.

More articles

Latest article