மும்பை

ச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உலகெங்கும் சமூக வலைத்தள வள்ர்ச்சியல் பிரிவினைவாதம் அதிகரித்துள்ளதாகக் கூறி உள்ளார். 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவி வகித்து வருகிறார். இன்று மும்பையில் நடைபெற்ற ஜம்னாலால் பஜாஜ் விருது வழங்கும் விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அவர் தனது உரையில்

“இன்று உலகம் முழுவதும் நாம் காணும் பிரிவினைவாதமும், வெறுப்புணர்வும் சமூக வலைதளங்களின் வளர்ச்சியால் மேலும் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் சகிப்புத்தன்மையற்ற சமூகம் உருவாகி, பிரிவினை அதிகரித்திருக்கிறது. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.

இந்தியாவுடன் 75 ஆண்டுகளுக்கு முன்பு பல நாடுகள் காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றன. அவற்றில் பல நாடுகளால் உண்மையான தன்னாட்சியை நிலைநிறுத்த முடியவில்லை. இந்தியாவால் அதன் ஜனநாயகத்தை நிலைநிறுத்த முடிந்தது. இந்தியா மற்ற நாடுகளை விடத் தன்னாட்சி மற்றும் ஜனநாயகத்தைப் பேணிக்காப்பதில் மேன்மையுடன் செயல்படுகிறது.”

என்று தெரிவித்தார்.