மெட்ராஸ் பட ஸ்டில் – பா.ரஞ்சித்

கோபி நயினார் இயக்கத்தில்  நயன்தாரா நடிப்பில் நேற்று முன்தினம் வெளியான “அறம்ட திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. சிறந்த பொழுதுபோக்கு படமாக மட்டுமின்றி, தரமான – மக்களுக்குத் தேவையான செய்திகளைச் சொல்லும் படமாகவும் இதை இயக்குநர் கோபி நயினார் உருவாக்கியிருக்கிறார் என்ற பலரும் பராட்டுகின்றனர்.

கு.உமாதேவி

இந்த நிலையில், பா.ரஞ்சித் இயக்கிய “மெட்ராஸ்” திரைப்படம் குறித்தும் பலர் விமர்சிக்கத்துவங்கியிருக்கிறார்கள்.

மெட்ராஸ் திரைப்படத்தை பா.ரஞ்சித் இயக்கி வெளியானது. அத்திரைப்படத்தின் கதை தன்னுடையது என்று அறம் படம் இயக்குநர் கோபி நயினார்  முன்பு வழக்கு தொடுத்திருந்தார். மேலும், பா.ரஞ்சித் இயக்கிய முதல் படமாக “அட்டகத்தி”யிலும், கோபி தனது படத்துக்காக உருவாக்கி வைத்திருந்த பல காட்சிகள் பயன்படுத்தப்பட்டன என்றும் புகார் எழுந்தது. இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் அறம் படம் வெளியானதில் இருந்து, “இந்த நல்ல இயக்குநரின் கருத்துக்களை திருடி அட்டகத்தி, மெட்ராஸ் படங்களை எடுத்தவர் ரஞ்சித்” என்று மீண்டும் பலர் சமூகவலைதளங்களில் பதிவி ஆரம்பித்தனர்.

இந்த நிலையில், ரஞ்சித்தின் மெட்ராஸ் படம் மூலம் பாடலாசரியராக அறிமுகமான கு.உமாதேவி இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “உளறிக்கொண்டே இருங்கள்….நான் அறிவேன் #மெட்ராஸ்இயக்குனர் ரஞ்சித்தின் சொந்த கதை என்று… பேரன்பும் பெருந்தன்மையும் கொண்ட இயக்குனர் # Pa_Ranjth அவர்களுக்கு எனது பேரன்பும் நன்றியும்…” என்று பதிவிட்டுள்ளார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த கபாலி படத்திலும் உமாதேவி பாடல்கள் எழுதியுள்ளார். மேலும் தற்போது வெளியாகியிருக்கும் அறம் திரைப்படத்திலும் பாடல்கள் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.