சென்னை
பராமரிப்பு பணி காரணமாக நெல்லை மற்றும் பொதிகை ரயில்கள் வரும் 9 ஆம் தேதி முதல் டிசம்பர் 7 வரை தாம்பரத்தில் இருந்து இயங்க உள்ளது.
தென்னக ரயில்வே சென்னை எழும்பூர் யார்டில் பராமரிப்பு மற்றும் தரம் உயர்த்தும் பணி நடப்பதால், நெல்லை, பொதிகை விரைவு ரயில்கள் அக்.9 முதல் டிச.7 வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் இவ்வேளையில் இத்தகைய அறிவிப்பு பயணிகளிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.
தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ::
திருநெல்வேலி – சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் நெல்லை விரைவு ரயில் (12632) மற்றும் செங்கோட்டை – சென்னை எழும்பூர் பொதிகை விரைவு ரயில் (12662) ஆகியவை வரும் 9-ம் தேதி முதல் டிசம்பர் 7-ம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப் படும். அதேபோல், விழுப்புரம் – தாம்பரம் பயணிகள் ரயில் (56060) வரும் 10-ம் தேதி முதல் டிசம்பர் 8-ம் தேதி வரை செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படும்.
சென்னை எழும்பூர் – திருநெல் வேலி நெல்லை விரைவு ரயில் (12631), சென்னை எழும்பூர் – செங்கோட்டை பொதிகை விரைவு ரயில் (12261) வரும் 10-ம் தேதி முதல் டிசம்பர் 7-ம் தேதி வரையில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
கயா – சென்னை எழும்பூர் வாராந்திர விரைவு ரயில் (12389) வரும் 13, 20, 27 நவம்பர் 3, 10, 17, 24, டிசம்பர் 1-ம் தேதிகளில் சென்னை எழும்பூருக்குப் பதில் சென்னை சென்ட்ரல் (எம்ஜிஆர்) நிலையத்துக்கு இயக்கப்படும். சென்னை எழும்பூர் – கயா வாராந்திர விரைவு ரயில் (12390) வரும் 15, 22, 29, நவம்பர் 5, 12, 19, 26, டிசம்பர் 3-ம் தேதிகளில் சென்னை எழும்பூருக்குப் பதில் சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 7.25 மணிக்குப் புறப்படும்.
ரயில் சேவையில் பல்வேறு மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், பயணிகளின் வசதிக்காக செங்கல் பட்டில் இருந்து தாம்பரத்துக்கு வரும் 10-ம் தேதி முதல் டிச. 8-ம் தேதி வரை காலை 9.15 மணிக்குச் சிறப்பு ரயில் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து பயணிகள், “விரைவில் தீபாவளி போன்ற பண்டிகை நாட்கள் வரவுள்ளது. இதனால் ஆவடி, கும்மிடிப்பூண்டி மற்றும் வட சென்னை பகுதிகளில் வசிக் கும் மக்கள் மிகவும் அவதியுறுவார்கள். இதனால் அவர்கள் நெல்லை மற்றும் பொதிகை விரைவு ரயில்கள் பயணம் செய்வ தற்கு வசதியாக, ஆவடி, கும்மிடிப் பூண்டியில் இருந்து தாம்பரத்துக்கு நேரடி மின்சார சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.