சென்னை

னது தலைவன் கருணாநிதி இன்னும் இறக்கவில்லை என முகநூலில்  முன்னாள் மேயர் சுப்ரமணியன் பதிவிட்டுள்ளார்.

தி மு க தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியைக் கட்சியினர் மட்டுமின்றி பலரும் கலைஞர் எனவும் தலைவர் எனவும் கூறுவது வழக்கமான  ஒன்றாகும்.   அவர் மறைந்த பிறகும் திமுக தொண்டர்கள் பலரின் நெஞ்சங்களில் அவர் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்

நேற்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் கருணாநிதியின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார்.   அப்போது அவருடன் திமுக மூத்த தலைவரும் முன்னாள் மேயருமான சுப்ரமணியன் உடன் சென்றுள்ளார்.   அப்போது நடந்த நிகழ்வுகளைப் பற்றி முகநூலில் சுப்ரமணியன் உருக்கமாக பதிந்துள்ளார்.

அந்தப் பதிவில்,

நேற்றிரவு கழகத்தலைவர் வணக்கத்திற்குரிய அண்ணன் தளபதி அவர்களுடன் முத்தமிழறிஞரின் நினைவிடத்திற்கு சென்றுகொண்டிருந்தேன்.
அப்போது அலைபேசியில் அண்ணன் மு.க.தமிழரசு அவர்களிடம் பேசிக்கொண்டே வந்த தளபதி அவர்கள்,”தமிழ்,நான் அப்பாவைப் பார்க்க போய்க்கிட்டிருக்கேன்” என்றார்.
நெகிழ்ந்தேன்…..மகிழ்ந்தேன்….என் தலைவன் இறக்கவில்லை

எனத் தெரிவித்துள்ளார்.