‘(கடலை) போட பொண்ணு வேணும்’: சென்னை முழுவதும் காணப்படும் ‘ஆபாச’ போஸ்டர்

Must read

ன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், சென்னையில் பல இடங்களிலோ  கடலை போட பொண்ணு வேணும் என  போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது.  இந்த போஸ்டர்கள் வித்தியாசமாகவும், ஆபாசமாகவும்  இருப்பதால் இது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலை போட பொண்ணு வேணும் என காணப்படும் இந்த போஸ்டரில் கடலை என்ற  வார்த்தை மறைக்கப்பட்டு டாஸ்….  போடப்பட்டு இருப்பதால், அதை பார்ப்போர்  அதிர்ச்சி அடைந்தனர். டாஸ்…. இடைவெளிவிட்டு கடலை போட பொண்ணு வேணும் என்று காணப்பட்டதால், போஸ்டரை கண்ட பெண்கள் உள்பட பொதுமக்கள் முகம் சுழித்தனர்.

ஆனால், அதன் அருகே உள்ள அடுத்த போஸ்டரை பார்க்கும்போதுதான் அது கடலை போட ஒரு பொண்ணு வேணும் என்ற படத்தின் போஸ்டர் என்பது தெரியவருகிறது.

சென்னை முழுவதும் காணப்படும் வித்தியாசமான மற்றும் ஆபாசமான போஸ்டர்

இன்று திடீரென நகர் முழுவதும் முளைத்துள்ள இந்த போஸ்டரை திடீரென பார்த்த மக்கள் சற்றே அதிர்ச்சி அடைந்தனர். இந்த போஸ்டரில் டஸ் கோடு போடப்பட்டு. …….  அதனுடன்  போட ஒரு பொண்ணு வேணும் என்று அச்சிடப்பட்டு உள்ளது. அதன் அருகில் படத்தின் ஸ்டில்லும் பெயரும் ஒட்டப்பட்டுள்ளது. இதை கண்ட பொதுமக்கள் ஏராளமானோர் இதுபோன்ற ஆபாச போஸ்டர்கள் ஒட்டப்பட்டது குறித்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர்.

இந்த போஸ்டரை பார்த்ததும், ஒருவருடைய மனதில் தோன்றும் நிகழ்வுகள் கற்பனைக்கு எட்டாதது. ஆபாசமான இந்த போஸ்டர்களை ஒட்டியது யார் என்றும் கேள்வி எழுந்தது. போஸ்டரில்  பிரிண்டர் உள்பட அச்சிடப்பட்டவர்கள் குறித்து எந்த பெயரும் இல்லாததால், இது சலசலப்பை உருவாக்கியது.

இந்த நிலையில் இந்த ஆபாச போஸ்டரான புதிய படத்தின் அறிவிப்பு என்ற தெரிய வந்துள்ளது.   டிவி தொகுப்பாளர் அஸார் ஹீரோ நடித்து மனீஷா நடித்துள்ள படத்தின் தலைப்பு என்றும், படத்தில் அவர்களுடன்  படவா கோபி, லொள்ளுசபா சுவாமிநாதன், லொள்ளுசபா மனோகர், ஃபைட்டர் தினா இப்படி ஒரு காமெடி பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்திற்குத்தான் இப்படி வித்தியாசமான முறையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இருந்தாலும் படத்தின் போஸ்டரை திடீரென பார்க்கும்போது, அது பார்ப்போரின் மனநிலையை பொறுத்து மாறுபடும் என்பது அனைவரும் அறிந்ததே.

More articles

Latest article