பேட்ட-ஐ தொடர்ந்து ஆக்‌ஷன் அட்வெஞ்சரில் கலக்கப்போகும் நடிகைகள் சிம்ரன் – திரிஷா

Must read

பிரபல நடிகைகளான சிம்ரான் திரிஷா ஆகியோர் பொங்கலுக்கு வெளியான ரஜினியின் பேட்டத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் ஆக்‌ஷன் அட்வெஞ்சர் கலந்த என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளது.

பெயரிடப்படாத இந்த படத்தில்  சிம்ரன் – த்ரிஷா இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன்  நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்த சிம்ரன், அதில் ரஜினியின் மற்றொரு ஜோடியான திரிஷாவுடன் இணைந்து நடித்திருந்தார். இவர்களின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டதால்,  ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க இருவரையும் ஒப்பந்தம் செய்துள்ள படத்தயாரிப்பு நிர்வாகம்.

இந்த படம் ஆக்‌ஷன்  படமாக உருவாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது . இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு, மார்ச் மாதம் முதல் தொடங்க இருக்கிறது. இதில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இரண்டு முன்னணி நடிகைகள் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது

 

More articles

Latest article