நிரவ் மோடி நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு: லண்டன் நீதிமன்றம் உத்தரவு

Must read

லண்டன்:

பிரபல வைரவியாபாரியான நிரவ் மோடி லண்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரின்   நீதிமன்ற காவல் ஜூன் 27ந்தேதி வரை நீட்டித்து லணடன் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, அவரது மாமா மெகுல் சோக்‌ஷி ஆகியோர், பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் 13ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு  கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பி தலைமறைவானார்கள். அவர்கள் மீது  சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து தேடி வந்தது.

இந்த நிலையில்,  இந்தியாவில் இருந்து தப்பிய  நிரவ் மோடி, பிரிட்டனில் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியும் நிரவ் மோடி, லண்டனில் ரூ. 73 கோடியில் பங்களா வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக ஆதாரங்களை வெளியிட்டது.

இதைத்தொடர்ந்தே மோடி அரசு  நிரவ்மோடியை  நாடு கடத்த நடடிவக்கை எடுத்தது. அதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்ப்டடார். அங்குள்ள வாண்ட்ஸ் வோர்த் சிறையில் நிரவ் மோடி அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், தனக்கு ஜாமின் வழங்கும்படி பலமுறை  தாக்கல் செய்தும், அது நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அவரது ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. அவரது நீதிமன்ற காவல் ஜூன் 27ந்தேதி நீட்டிப்பு செய்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article