பெய்ஜிங்:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி ஹாங்காங்கில் பதுங்கியிருக்கும் தகவல் கிடைத்துள்ளது.

நிரவ் மோடியை கைது செய்ய சீனா குடியரசில் தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிராந்தியத்தின் அனுமதியுடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் வி.கே.சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து சீனா வெளியுறவு துறை அமைச்சக செயதி தொடர்பாளர் ஜெங் சாவ்ங் கூறுகையில்,‘‘இந்தியா உரிய முறையில் கோரிக்கை விடுத்தால் ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிராந்தியம் உள்ளூர் சட்ட விதிகளுக்கு உட்பட்டும், இந்தியாவுடனான நீதித்துறை ஒப்பந்த அடிப்படையிலும் முடிவு எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதில் சீனா தலையிடாது’’ என்று தெரிவித்துள்ளார்.