லண்டன்:

இங்கிலாந்து இளவரசர் வில்லியம், இளவரசி கேத்தரின் தம்பதியருக்கு 3வது குழந்தை பிறப்பதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது. குழந்தையை பிறப்புக்கு கேம்பிரிட்ஜ் அரண்மனையும் தயாராகி வருகிறது. இந்த தம்பதியருக்கு ஏற்கனவே ஜார்ஜ் என்ற மகனும், சேர்லோட் என்ற மகளும் உள்ளனர். தற்போது கேத்தரின் 3வது முறையாக கர்ப்பமாக உள்ளார். இந்த மாத இறுதியில் பிரசவம் நடைபெறவுளளது.

லண்டன் லிண்டோ விங் பகுதியில் உள்ள செயின்ட் மேரீஸ் மருத்துவமனையில் பிரசவம் நடக்கவுள்ளது. இளவரசர் வில்லியமும், அவரது 2 குழந்தைகளும் இதே மருத்துவமனையில் தான் பிறந்தனர். 2வது குழந்தைக்கு பிரசவம் பார்த்த ஆலன் பார்திங் மற்றும் தோர்பி பீஸ்டன் ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினரே இந்த பிரசவத்தையும் பார்க்கவுள்ளனர். முதல் குழந்தை 2013ம் ஆண்டும், 2வது குழந்தை 2015ம் ஆண்டும் பிறந்தது.

                                                  செயின்ட் மேரீஸ் மருத்துவமனை

மன்னர் குடும்பத்தின் 3வது வாரிசு பிறப்பை முன்னிட்டு சர்வதேச மீடியாக்கள் லண்டனில் முகாமிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கு ஏற்ப போலீசார் இப்போதே தயாராகி வருகின்றனர். முக்கியமான பகுதிகளில் வாகன நிறுத்த தடை விதிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.

தற்போது பிறக்கவுள்ள குழந்தை, ராணி எலிசபெத்தின் 6வது பேரக் குழந்தையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மன்னர் குடும்பம் என்றபோதும் குழந்தையின் பாலினம் ரகசியமாக வைக்கப்பட்டுள்து. தம்பதியர் இதை அறிய விரும்பாத காரணத்தால் இது கண்டறியப்படவில்லை.