சென்னை: பாமக உள்ளிட்ட 6 மாநில கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக தலைநகர் டெல்லியில் அகலி இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை செய்து வருகிறது.
வன்னியர் இன மக்களை மட்டுமே வைத்துக்கொண்டு கட்சி நடத்தி வரும்டாக்டர் ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சி, சில ரசிகர்களை வைத்துக்கொண்டு கட்சி நடித்தி நடிகர் விஜயகாந்தின் தேசிய திராவிட முன்னேற்றக் கழகம் அரசியல் கட்சிகளுக்கான அங்கீகாரத்தை கடந்த 2019ம் ஆண்டே இழந்து உள்ளன. இநத் நிலையில், தற்போது மீண்டும் பாமக உள்பட 6 கட்சிகளின் அங்கீகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
தற்போதைய நிலையில், தமிழ்நாட்டில், அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, பாரதிய ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தே.மு.தி.க., தேசியவாத காங்கிரஸ்ஆகிய கட்சிகள் மட்டுமே அங்கீகாரத்துடன் உள்ளன.
பா.ம.க., மதிமுக, விடுதலை சிறுத்தைகள் போன்ற மற்ற கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் உள்ளன. ஆனால், இவர்கள் போதிய வாக்குகள் பெறாத நிலையில் அங்கீகாரத்தை இழந்துள்ளன. இந்த கட்சிகள் தேர்தலில் அதிகாரப்பூர்வ கட்சி ரீதியாக போட்டியிட முடியாது. இவர்கள் அனைவருமே, சுயேச்சையாக கருதப்படுவர்.
இந்த நிலையில், கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளமன்ற தேர்தலில் 6% கீழ் வாக்குகளை பெற்ற கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த பட்டியிலில், தமிழ்நாட்டின் பாமக, பாரத் ராஷ்ட்டிரிய சமிதி, ஆர்.எல்.டி., உள்ளிட்ட 6 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த கட்சிகளிடம் அங்கீகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 257 கட்சிகளாம்; ஆனால் 10 கட்சிகளுக்கு மட்டுமே அங்கீகாரம்! தேர்தல் ஆணையம்