சென்னை:
அரசியல் கட்சியாக பதிவு செய்த போது கொடுத்த விதிமுறைகளை பா.ம.க. மீறியுள்ளது. ஆகவே அக் கட்சியை தடை செய்வது குறித்து தேர்தல் கமிஷன் பரிசீலனை செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

“2013ம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியினரின் கலவரத்தால் பொது சொத்துக்கள் சேதமடைந்தன. . இதனால் பாட்டாளி மக்கள் கட்சியை தடை செய்ய வேண்டும்” என்று பத்திரிகையாளர் வாராகி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில், “உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் பாமக அரசியல் கட்சியாக பதிவு செய்த போது கொடுத்த விதிமுறைகளை மீறியுள்ளது. அதனால் தேர்தல் ஆணையம் பாமகவை தடை செய்ய பரிசீலனை செய்ய வேண்டும்” உத்தரவிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel