சென்னை:
திரைப்பட இயக்குனர் மணிரத்னத்தின் அபிராமபுரம் அலுவலகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டது.  இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகின.
a
திரைப்பட இயக்குனர் மணிரத்னத்தின் அலுவலகம் சென்னை அபிராமபுரத்தில் உள்ளது. அங்கு  இன்று திடீரைன தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
விபத்திற்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை. இந்த விபத்தில் அலுவலகத்தில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.