கோவை:
க்கி வாசுதேவின் ஈஷா யோகா மையம் மீது பல்வேறு புகார்கள் தொடர்ந்து கூறப்பட்டு வருகின்றன. இந்த புகார்கள் குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை ஆட்சியரிடம் ஆதித் தமிழர் கட்சியினர் மனு அளித்துள்ளனர்.
ஈஷா யோகா மையம் குறித்து சமீப நாட்களாக சர்ச்சைக்குரிய செய்திகள் தொடர்ந்து வெளியானபடி இருக்கின்றன.  தங்கள் பிள்ளைகளை மூளைச்சலவை செய்து, போதை மருந்து கொடுத்து அடிமையாக வைத்திருக்கிறார் ஜக்கி என்றும் புகார் எழுந்தது.    மேலும், சிறு குழந்தைகளை பைத்தியமாக்குகிறார்கள்; சேவா தண்டனை என்ற பெயரில் கொடுமைப்படுத்துகிறார்கள் என்றும் புகார்கள் கிளம்பியிருக்கின்றன.
Untitled-1
வனப்பகுதியில் முறைகேடாக ஈஷா மையம் கட்டப்பட்டிருக்கிறது, நிகழ்ச்சிகளுக்கு கட்டணம் என்ற பெயரில் மிக அதிக தொகை வாங்கப்படுகிறது என்றும் ஏற்கெனவே புகார்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் கோவை ஆட்சியரிடம் ஆதித் தமிழர் கட்சியினர் மனு  ஒன்றை அளித்தனர்.
அதில்,   ஈஷா யோகா மையம் மீதான புகார்களை ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழு விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.  மேலும், ஈஷாவில் உள்ள பணியாளர்கள், சன்னியாசிகள் நிலைமை குறித்து ஆராய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.