டெல்லி: டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்றம் கட்டுமானப் பணிகளை பிரதமர் மோடி நேற்று இரவில் பார்வையிட்டார்.

டெல்லியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு, தற்போது பயன்படுத்தப்பட்டு வரும்  நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு 100 ஆண்டுகளை கடந்துள்ளது. இதனால், புதிய பாராளுமன்ற கட்டிடம்   ரூ.861.90 கோடி செலவில்  64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. புதியதாக கட்டப்பட உள்ள  நாடாளு மன்றக் கட்டிடத்தில்,  மக்களவையில் 876 இடங்களும், மாநிலங்களவையின் 400 இடங்களும், மத்திய மண்டபத்தின் 1224 நாடாளுமன்ற உறுப்பினர்கள்  அமரக்கூடிய வகையில் கட்டப்பட்டு வருகிறது. அத்துடன், அலுவலகங்கள் மற்றும் பிரதமர் மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோருக்கு ஒரு புதிய குடியிருப்பு வளாகத்தை கட்டப்பட்டு வருகிறது.

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பாராளுமன்றத்தின் கட்டுமான பணிகளை பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட்டார்.மார் ஒரு மணி நேரம் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

விஸ்டா திட்ட கட்டுமானப் பணிகளை வரும் 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதால், பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த கட்டுமானத்தை டாட்டா நிறுவனம் மேற்கொள்கிறது. இதற்கான பூமிபூஜை, 2019ம ஆண்டு டிசம்பர் 10ந்தேதி தொடங்கி கட்டப்பட்டு வருகிறது.