புதுடெல்லி:

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து முறைப்படி தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடி கொடுத்தார்.

மக்களவை தேர்தலில் நாடு முழுவதும் 303 இடங்களில் தனிப் பெரும்பான்மையும் பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது.

இதன்மூலம் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கிறது. இரண்டாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில், இன்று மாலை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.

தற்போதைய அமைச்சரவை மற்றும் 16-வது மக்களவை முடிவுக்கு வருவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அப்போது மத்திய அமைச்சர்கள் தங்கள் ராஜினாமா கடித்ததை அளித்தனர்.

அருண் ஜேட்லி தவிர மற்ற மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி சந்தித்தார்.

அப்போது முறைப்படி தனது ராஜினாமா கடிதத்தை பிரதமர் வழங்கினார். புதிய அரசு அமையும் வரை பிரதமராக நீடிக்குமாறு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில், வரும் 30-ம் தேதி 2-வது முறையாக நாட்டின் பிரதமராக மீண்டும் மோடி பதவியேற்கவுள்ளதாக தெரிகிறது.