டெல்லி: பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ள  பரிசுப் பொருட்கள் ஏலம் விடப்படுகிறது. அதன்படி, ஆன்லைன் மூலம்  மின்னணு ஏலத்தில் பிரதமர் மோடியின் பரிசு பொருட்கள்  ₹100 முதல் ₹64 லட்சம் வரை விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வெளிநாடுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்போது, அவருக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பரிசுப் பொருட்கள் வழங்குகின்றனர். இவ்வாறு கிடைத்த பரிசுப் பொருட்களை ஏலம் விட்டு,  அதன்முலம் கிடைக்கும் வருவாய் கங்கை சுத்திகரிப்புக்கு வழங்கப்பட்டு வருகிறது.  இதுபோல ஏற்கனவே  4 முறை  பிரதமரின் பரிசு பொருட்கள் ஏலம் விடப்பட்ட நிலையில், தற்போது  5-வது முறையாக மீண்டும் ஏலம் விடப்படுகிறது.

இந்தப் பரிசுப் பொருட்களின் மின்னணு ஏலம், இன்று முதல் தொடங்குகிறது. அக்டோபர் 31-ம் தேதி வரை நடைபெறும் இந்த ஏலத்தில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். இந்த ஏலத்தில் குறைந்த பட்சம்  100 ரூபாய் முதல் 65 லட்சம் வரையிலான பொருட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், டெல்லியில் உள்ள நேஷனல் கேலரி ஆஃப் மாடர்ன் ஆர்ட்டில் இதுபோன்ற நினைவுப் பரிசுகளின் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இது 150-க்கும் மேற்பட்ட குறிப்பிடத்தக்க நினைவுப் பரிசுப் பொருட்களைக் கொண்டதாக இருக்கிறது. இது நாட்டின் கலாச்சார அதிர்வு பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது. தாராள மனப்பான்மை, நல்லெண்ணம் மற்றும் அர்த்தமுள்ள பரிசளிப்பு கலை ஆகியவற்றை இக்கண்காட்சி வலியுறுத்துகிறது.

ஏலத்தில் பொருட்களை வாங்க விரும்புவோம் https://pmmementos.gov.in/#/ என்றை இணையதளத்தை பார்வையிட்டு தங்களது தேவையான பொருட்களை வாங்கலாம்.