டில்லி

ருத்துவக் கல்லூரிகள் ஆசிரியர்  பற்றாக்குறையால் அவதி அடைந்துள்ளதாகக் காங்கிரஸ் கண்டனம்  தெரிவித்துள்ளது.

சமீபத்தில் தேசிய மருத்துவ ஆணையம் கிடைத்த ஆண்டில் நடத்த ஆய்வில்  பெரும்பான்மையான கல்லூரிகளில் போதுமான ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் இல்லை என அறிவித்தது,  இது நாடெங்கும் கடும் அதிர்வலைகளை உண்டாக்கியது

இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ்

“இதுவரை 216 மருத்துவக் கல்லூரிகளுக்குத் தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.  ஆனால் இந்தக்கல்லூரிகள் எதிலும் போதிய ஆசிரியர்கள் இல்லாதது அதிர்ச்சியை அளிக்கிறது.  இதனால் கல்லூரிகளும் மக்களும் கடும் அவதிக்கு உள்ளாகினர். 

இந்த தகவலை அளித்துள்ள தேசிய மருத்துவ ஆணையம் எப்போதும் மோடியைப் புகழ்வதில் மட்டுமே கவனம் செலுத்து வருகிறது  இவ்வாறு நடப்பதால் என்ன நடக்கும் என்பது தற்போது அனைவருக்கும் தெரிந்துள்ளது.”

என்று கண்டனம் தெரிவித்துள்ளார்