சென்னை:

பிரதமர் தமிழகம் வரும்போது #GoBackModi  என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக்கப்படும் நிலையில், தற்போது, சீன அதிபரை சந்திக்க பிரதமர் மோடி தமிழகம் வரும் நிலையில், சீனாவில் உள்ள தமிழர்கள், சீன மொழியில் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டிங்காக்கி வருகின்றன.

பிரதமர் மோடி, சீன அதிபர் இடையே சந்திப்பு புராதன நகரமான மாமல்லபுரத்தில் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது. இதையொட்டி பலத்த பாதுகாப்பும், பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

சீனஅதிபர் மற்றும் மோடியின் சந்திப்புக்கு திமுக உள்பட அரசியல் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், சிலர் சமூக வலைதளமான டிவிட்டரில் #GoBackModi  என்ற ஹேஸ்டேக்கை, தற்போது தேசிய அளவில்  டேக்  செய்து டிரெண்டாக்கி வருகின்றனர்.

தமிழகம் வரும் சீன அதிபருக்கு புரிய வேண்டும் என்பதற்காக தற்போது சீன மொழியிலும் தமிழர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். இது தற்போது வைரலாகி வருகிறது.