சென்னை: தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  நடத்தி வரும் என் மண் என் மக்கள் பாதயாத்திரையில் கலந்துகொள்ள பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வருகிறார். பிப்ரவரி 18ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் அண்ணாமலையுடன் யாத்திரையில் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி ஏற்கனவே  ஜனவரி மாத தொடக்கத்தில் பிரதமர் மோடி திருச்சி வருகை தந்து, விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, இரண்டாவது முறையாக கடந்த 19ம் தேதி 3 நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். அப்போது, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்ததோடு, ஸ்ரீரங்கம் மற்றும் ராமேஷ்வரம் பகுதிகளில் உள்ள புன்னிய ஸ்தலங்களுக்கு சென்று இறைவழிபாட்டில் ஈடுபட்டார். இந்நிலையில், தான் மூன்றாவது முறையாக வரும் பிப்ரவரி 18ம் தேதி மீண்டும் பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார்.

என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார் பாஜகவின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை.  2024 தேர்தலுக்கு முன்னதாக, கட்சித் தலைவர் நரேந்திர மோடியை தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகப் பிரதிபலிப்பதாகும். இது தமிழ் கலாச்சாரத்தை உலகம் முழுவதும் பரப்புவதையும், திமுகவின் ஊழல் குற்றச்சாட்டுகளை அம்பலப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது.

மேலும், ஊழல் மாநிலஅரசுகளிடம் இருந்து மக்கள் வெளியேறும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும்,   2024 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு யாத்திரை நடத்தி வருகிறார். அவரது  என் மன் என் மக்கள் யாத்திரை 2023ம் ஆண்டு ஜூலை 28 அன்று ராமநாதபுரத்தில்,  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால்  கொடியசைத்து தொடங்கி  வைக்கப்பட்டது.

அண்ணாமலை மேற்கொண்டு வந்த பாதயாத்திரைக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. அதுபோல,   இந்த பாதயாத்திரை பாஜகவிற்கு பெரும் வாக்கு வங்கியை பெற்று தரும் என்று அண்ணாமலை தொடர்ந்து கூறி வருகிறார். மேலும் அவ்வப்போது திமுக அரசு மீதான ஊழல் புகார்களையும் ஆதாரத்தோடு வெளியிட்டு வருகிறார். இதற்கு மக்களிடைய நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த நிலையில், அண்ணாமலையின்  யாத்திரையாது பல்வேறு மாவட்டங்களை கடந்து தற்போது, சங்கராபுரம் தாண்டி, கீழ் பெண்ணாத்தூர், கலசபாக்கம் வழியாக இன்று மாலை திருவண்ணாமலையை அடைகிறது. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் வழியாக செல்லும் யாத்திரை வரும் 18ந்தேதி  பல்லடம் திருப்பூர் பகுதியில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் பிப்ரவரி 18ஆம் தேதி  திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற உள்ள  பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணத்தின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.