சென்னை: பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

தமிழ்நாட்டில் புதியதாக திறக்கப்பட உள்ள 11 மருத்துவக்கல்லூரிகள்  திறப்பு விழாவுக்கு வரும் 12ந்தேதி பிரதமர் மோடி விருதுநகர் வருகை தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், பாஜகவினர் நடத்தும் பொங்கல் விழா, அன்று மாலை புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றிலும் பிரதமர் மோடி கலந்துகொள்வதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தமிழ்நாடு வருகை ரத்துசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் பஞ்சாப் சென்ற பிரதமர் மோடியின் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவரது வெளிமாநில பயணத்திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாட்டில்  பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளதுடன், மக்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதை கருத்தில் கொண்டு பிரதமரின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.