காந்திநகர்: பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக தாயார் ஹீராபென் உடலை வீட்டில் இருந்து தகனமேடைக்கு சுமந்து சென்ற பிரதமர் மோடி, அங்கு இறுதி மரியாதை செய்த பின்னர், அங்கிருந்த சிதையில் வைக்கப்பட்ட உடலுக்கு தீ மூட்டினார்.
100 வயதான பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதையடுத்து, இன்று மேற்கு வங்காளத்தில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்குவதற்காக செல்ல இருந்த பிரதமர், அதை ஒத்தி வைத்துவிட்டது, தாயார் ஹீராபென் மறைவையடுத்து பிரதமர் மோடி அகமதாபாத்துக்கு விரைந்தார். அங்கு, மறைந்த தனது தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
ஹீரா பென்னின் உடல் காந்தி நகரில் உள்ள பிரதமர் மோடியின் சகோதரரின் வீட்டில் உடல் வைக்கப்பட்டது. அங்கு, தனது தாயாரின் உடலுக்கு மலர் வளையம் வைத்த பிரதமர் மோடி காலில் விழுந்து வணங்கி தனது அஞ்சலியை செலுத்தினார். தொடர்ந்து அவரது உடலை, ஊர்வலமாக தகன மேடை உள்ள மயானத்திற்கு சுமந்து சென்றார். அங்கு தனது தாயாரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து ஹீராபென் உடல் அங்கு தயார் செய்து வைக்கப்பட்டிருந்த சிதையில் ஏற்றி வைக்கப்பட்டது. அந்த சிதைக்கு பிரதமர் மோடி தீ மூட்டினார். இதன்மூம் பிரதமர் மோடியின் தாயார் ஹீரா பென்னின் உடல் தகனம் செய்யப்பட்டது. தகனம் எரிவதை சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்த பிரதமர் மோடி, சோகத்துடன் அங்கிருந்து திரும்பினார்.