மாஸ்கோ

ந்தாம் முறையாக ரஷ்ய அதிபராகும் புதினுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விளாடிமிர் புதின் ரஷிய அதிபருக்கான தேர்தலில், 5 ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.  இந்த தகவலை மாஸ்கோவில் இருந்து வெளிவரும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தேர்தல் நடைமுறை பற்றி சில மேற்கத்திய நாடுகள் விமர்சித்து வருகின்றன.

ரஷ்ய அதிபர் தேர்தல் முறைகேடு பற்றி கிரெம்ளின் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் ஊடகத்திற்கு \அளித்த பேட்டியில், ரஷ்யத் தேர்தல்களில் சட்டவிரோதம் பற்றி பேசுவது மிகவும்அபத்தம் என்று கூறி உள்ளார்.

இந்திய, பிரதமர் மோடி எக்ஸ் சமூக ஊடகத்தில்

”ரஷ்யக் கூட்டமைப்பின் அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா மற்றும் ரஷியா இடையேயான சோதனையான காலத்தில், சிறந்த மற்றும் தனியுரிமை பெற்ற ராஜதந்திர நட்புறவை இன்னும் வலுப்படுத்த, வருகிற ஆண்டுகளில் ஒன்றாக இணைந்து பணியாற்ற எதிர்பார்த்து இருக்கிறேன் 

எனப் பதிவிட்டு உள்ளார்.