டில்லி

க்ரைன் நாட்டில் உயிர் இழந்த இந்திய மாணவர் நவீனின் பெற்றோருக்கு பிரதமர் மோடி தொலைப்பேசி மூலம் ஆறுதல் கூறி உள்ளார்.

ரஷ்ய தொடர்ந்து 6 ஆம் நாளாக உக்ரைன் மீது உக்கிரமாகப் போர் தொடுத்து வருகிறது. இதனால் ஆப்ரேஷன் கங்கா திட்டம் மூலம் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களைத் தாயகம் அழைத்து வர ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.  உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதல் அதிகரிக்கக்கூடும் என்பதால் இன்றே உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து இந்தியர்கள் அவசரமாக வெளியேற வேண்டும் என்று இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

உக்ரைனில் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் ரயிலிலோ அல்லது வாகனங்களிலோ கீவ் நகரிலிருந்து எப்படியாவது வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டில் கார்கில் நகரில் நிகழ்ந்த குண்டுவீச்சில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர் கார்கில் நகரில் இருந்து வெளியேறி ரயில் நிலையம் சென்றபோது ரஷ்யக் குண்டுவீச்சு தாக்குதலில் பலியானார். இந்த மாணவர் கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்த நவீன் சேகரப்பா என்பது தெரியவந்துள்ளது.

ரஷ்ய படைகள் உக்ரைனின் கார்கிவ் நகரில் நிகழ்ந்த குண்டு வீச்சில் இந்திய மாணவர் நவீன் உயிரிழந்து மக்களிடையே கடும் சோகத்தை அளித்துள்ளது.   பிரதமர் மோடி இந்திய மாணவர் நவீனின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறி உள்ளார்.  அவர் தொலைப்பேசியில் பேசி ஆறுதல் தெரிவித்துள்ளார்.