ரோம்

ரோம் நகரில் நடைபெற்று வரும் ஜி 20 நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார்.

இத்தாலி நாட்டின் தலைநகரான ரோம் நகரில் ஜி 20 நாடுகள் மாநாடு நடந்து வருவதை ஒட்டி இந்தியப் பிரதமர் மோடி இத்தாலி சென்றுள்ளார்.  அவர் அங்குள்ள வாடிகன் நகரத்துக்குச் சென்று கத்தோலிக்கர்கள் தலைவரான போப் ஆண்டவரை ச்ந்த்து பேசி உள்ளார்.  பிறகு அவர் ரோம் நகரில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டுத் தொடக்க விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

இது குறித்து இந்திய வெளியுய்றவுச் செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”பிரதமர் மோடி ஜி 20 மாநாடு தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியபோது இந்தியா கொரோனா காலகட்டத்தின் போது திறம்பட பணியாற்றி உலகின் 150 நாடுகளின் பாராட்டுகளைப் பெற்றது குறித்து தெரிவித்தார். 

மேலும் அவர் இந்தியாவின் துணிச்சலான பொருளாதார சீர்திருத்தத்தின் மூலம் இந்தியாவில் பல நாடுகளும் வர்த்தகம் புரிய ஆர்வம் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.  தவிர  ஒரு பூமி ஒரே சுகாதாரம் என்னும் நோக்கில் நமது நாடு சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வுடன் செயல்படுவதை விளக்கி கொரோனாவுக்கு எதிராக அனைத்து நாடுகளும் இணைந்து போராட அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவில் மட்டுமே 100 கோடிக்கும் மேல் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதையும் நாட்டில் சுமார் 500 கோடிக்கும் மேல் தடுப்பூசி உற்பத்தி செய்துள்ளதையும் தெரிவித்த மோடி கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்தால் இந்த 500 கோடி தடுப்பூசிகளால் பல உலக நாடுகள் பயனடையும் எனக் கூறி உள்ளார்.” எனத் தெரிவித்துள்ளார்.