டில்லி

ந்தியாவின் வரலாற்றுச் சாதனையாக விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கி உள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து நிலவைச் சுற்றி வந்தது.  அதன் உயரம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வந்தது/.

இன்று மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் தரை இறங்கும் என இஸ்ரோ அறிவித்து இருந்தது.  அதன்படி விக்ரம் லேண்டர் நிலவில் வெற்றிகரமாகத் தரை இறங்கி உள்ளது.

இந்த வரலாற்றுச் சாதனைக்காகப் பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்