மேல் மருவத்தூர்

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவுக்குப் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 82. பங்காரு அடிகளாரைப் பின்பற்றுபவர்களும் ஆதிபராசக்தி கோயிலின் பக்தர்களும் அவரை ‘அம்மா’ என்று அழைத்துவந்தனர்.

அடிகளார் உடல்நலக் குறைவு காரணமாகக் கோவில் வளாகத்தில் உள்ள வீட்டில் இருந்தபடி மருத்துவச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை 5 மணி அளவில் பங்காரு அடிகளார் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அடிகளாரின் மரணச் செய்தியை அறிந்து பக்தர்கள் மேல் மருவத்தூரில் தற்போது குவிந்து வருகிறார்கள்.

பொதுமக்கள் அஞ்சலிக்காக, அவர் உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. பக்தர்கள்  அவருக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

மேல் மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவுக்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் ” மனித குலத்திற்கான தனது அயராத சேவை, கல்விக்கான முக்கியத்துவத்தின் மூலம் பலரின் வாழ்க்கையில் நம்பிக்கை, அறிவை விதைத்தார் பங்காரு அடிகளாரின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது” என்று பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

இன்று மேல் மருவத்தூர் பங்காரு அடிகளாரின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்படுகிறது  அவரது உடல் மேல் மருவத்தூரில் உள்ள தியான மண்டபம் அருகே  நல்லடக்கம் செய்யப்படுகிறது

முதல்வர் மு க ஸ்டாலின் பங்காரு அடிகளாரின் உடல் அடக்கம் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று தனது இரங்கல் செய்தியில் அறிவித்துள்ளார். .

பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மேல் மருவத்தூர் செல்கிறார்.

பங்காரு அடிகளாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவதால் சுமார் 2 ஆயிரம் காவலர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.