டில்லி

ற்போது அயோத்திக்குச் செல்ல வேண்டாம் எனப் பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார். 

கடந்த 22 ஆம் தேதி அன்று உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் பிரதிஷ்டை கோலாகலமாக நடைபெற்றது.  பிரதமர் மோடி முதலில் தீப ஆராதனை காட்டி வழிபாடு நடத்தினார். விழாவில் பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தற்போது அயோத்தியில் பொது தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலில் தரிசனத்திற்காகக் குவிந்து வருகின்றனர்.  பாதுகாவலர்கள்  பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மந்திரிசபை கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் தற்போதைக்கு அயோத்தி செல்ல தவிர்க்க வேண்டாம் எனப் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமைச்சர்கள் செல்லும்போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால், மார்ச் மாதத்தில் மத்திய அமைச்சர்கள்  அயோத்தி செல்ல வேண்டும் எனப் பிரதமர் மோடி கேட்டு கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.