சென்னை: தமிழகத்தில்பிளஸ் 2 பொதுத்தேர்வு 5ம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்வை சுமார் 6லட்சம் மாணாக்கர்கள் எழுத உள்ள நிலையில், தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 3,119 மையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளது.
நடப்பாண்டு 1 முதல் 12ம் வகுப்புவரை அனைவருக்கும் பொதுத்தேர்வு நேரடித்தேர்வாகவே நடத்தப்படும் என தமிழகஅரசு ஏற்கனவே அறிவித்து உள்ளது. அதன்படி, 10, 11, 12ம் வகுப்பு தேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்டன. அதன்படி பிளஸ் 2 வகுப்புக்கான தேர்வு நாளை மறுநாள் (ஏப்ரல் 5ந்தேதி) தொடங்குகிறது. இந்த தேர்வை தேர்வில் சுமார் 6 லட்சம் மாணவ மாணவியர் எழுத உள்ளனர். இதன் தொடர்ச்சியாக மே 6ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு தொடங்குகிறது. இதை சுமார் 8 லட்சம் மாணவ மாணவியர் எழுத தயாராக உள்ளனர்.
பிளஸ்2 பொதுத்தேர்வுக்காக மாநிலம் முழுவதும் சுமார் 3,119 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மாநில முழுவதும் 6 லட்சம் மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். தேர்வை கண்காணிக்க 1000 பறக்கும் படைகள் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் மின்துண்டிப்பு ஏற்பட்டால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க ஜெனரேட்டர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு தவிர்க்க அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறை களையும் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. 2ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பொதுத்தேர்வு முழுமையாக நடைபெறுகிறது.
ஏற்கனவே கடந்த வாரம் முதல் மாணவர்களுக்கு நடைபெற்று வந்த செய்முறை தேர்வுகள் நேற்றுடன் (மே 2ந்தேதி) நிறைவு பெற்றது. இதேபோல் பிளஸ் 1 மாணவர்களுக்கு மே 9ம் தேதியும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 30ம் தேதியும் தேர்வுகள் தொடங்கவுள்ளன.