மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடிய ஆசிரியர்கள்: பிளஸ்2 விடைத்தாள் திருத்தியதில் மெத்தனம்! 500ஆசிரியர்களுக்கு அரசு நோட்டீஸ்

Must read

சென்னை:

யர்கல்வி படிப்பதற்கு அடித்தளமான பிளஸ்2 தேர்வு விடைத்தாள்கள் ஏனோதானோவென்று திருத்தப்பட்டுள்ளது அம்பலமாகி உள்ளது.  விடைத்தாள்களை திருத்திய ஆசிரியர்கள் மெத்தன மாகவும், கவனக்குறைவாகவும் திருத்தியதால் ஏராளமான மாணவ மாணவிகளின் மதிப்பெண் களில் வித்தியாசம் ஏற்பட்டுள்ள அவலம் தெரியவந்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஐஐடி, மருத்துவம், பொறியியல் உள்பட பல்வேறு உயர்கல்வி படிப்புக்கு பிளஸ்2 தேர்வு மதிப்பெண் முக்கிய பங்காற்றும் நிலையில், ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளின் கவனக்குறைவு மற்றும் ஏனோதானோவென்று விடைத்தாள்கள் திருத்தப்பட்டுள்ள செயல், மதிப்பெண் குறைவு காரணமாக மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் பெற்றதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்களின் வாழ்க்கை யில் விளையாடிய ஆசிரியர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் போர்க்குரல் எழும்பி உள்ளது.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 19ந்தேதி தொடங்கி நடை பெற்றது.  விடைத் தாள்களை திருத்தும் பணிகளில் சுமார் 25 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். சுமார் 60 லட்சம் விடைத்தாள்களைத் திருத்திய இந்த ஆசிரியர்கள் மதிப்பெண்ணை கூட்டும்போது பிழை மற்றும் சில கேள்விகளுக்கு தவறான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

தேர்வு முடிவை தொடர்ந்து, தங்களது மதிப்பெண்களால் திருப்தி அடையாமல், சந்தேகம் அடைந்த சுமார் 50 ஆயிரம் மாணவர்கள்  தேர்வு விடைத்தாள் நகல் கேட்டு  விண்ணப்பித்திருந்ததாகவும், அதில், மறுகூட்டலுக்கு 4 ஆயிரத்து 500 மாணவர்கள் விண்ணப்பித்ததாகவும் தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்திருந்தது.

மாணவர்கள் தாங்கள் பெற்ற விடைத்தாள் நகலை பெற்றதும் அதிர்ச்சி அடைந்தனர். அதில் ஏராள மானோரின்  மதிப்பெண் கூட்டலில் தவறு இருப்பதும், பலரது விடைத்தாளில் சரியான முறையில் மதிப்பெண் போடப்படாததும் தெரிய வந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவர் களின் பெற்றோர்கள்  தேர்வுத்துறை இயக்குரகத்தில் புகார் அளித்தனர். சுமார் 30 சதவிகித விடைத்தாள் திருத்தம் செய்ததில் தவறுகள் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
இதுதவிர, 100 மதிப்பெண்களுக்கு 72 மதிப்பெண் பெற்ற மாணவருக்கு 27 மதிப்பெண் பெற்றதாக பிழையாக மதிப்பெண் போட்டது உள்பட பல்வேறு தவறுகள் நடைபெற்றுள்ள வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதன் காரணமாக மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதையடுத்து, சுமார் 500 ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளுக்கு, தவறுக்கான  விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தங்களது சம்பளத்துக்கான போராடும் ஆசிரியர்கள், மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆசிரியர்களின் கவனக்குறைவு காரணமாக உயர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியாமல் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடும் இதுபோன்ற ஆசிரியர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் பெரும்பாலான ஆசிரியர்கள், இடை நிலைக் கல்வி படித்தவர்களாகவே உள்ளனர். இவர்கள் தங்களின் சம்பள உயர்வுக்காக  தொலைதூரக்கல்வி வாயிலாக பட்டப்படிப்பையும், பிஎட், எம்.எட் போன்ற படிப்புகளையும் பணம் கொடுத்து  வாங்கிகொண்டு பதவி உயர்வும் சம்பள உயர்வும் பெற்றுக்கொண்டு பணியாற்றி வருகிறார்கள்.

சலுகைகளுக்காக போராடும் ஆசிரியர்கள்

ஆனால், இவர்களால் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு சிறப்பான கல்வியைகூட போதிக்க தகுதிகூட இல்லாத நிலையே அரசு பள்ளிகளில் நீடித்து வருகிறது. இதுபோன்ற சில ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளை  கொண்டு விடைத்தாள் திருத்தம் செய்யப்படுவதால், ஏராளமான தவறுக்ள நடைபெறுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

வாங்கும் சம்பளத்துக்கு தகுதியில்லாமல், எதற்கெடுத்தாலும் போராட்டத்தை கையிலெடுக்கும் ஆசிரியர் சங்கங்கள் மாணவர்களின் மதிப்பெண்களில் தவறு எற்பட்டதற்கு என்ன காரணம் சொல்லப்போகிறது…

ஆசிரியர்கள் விஷயத்தில் அரசும் பள்ளிக்கல்வித்துறையும் கவனமாக செயல்பட வேண்டியது அவசியம். சம்பள உயர்வுக்காக தொலைதூர கல்வி மூலம் உயர்படிப்பு படிக்கும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வோ, சம்பள உயர்வோ வழங்கக்கூடாது.

இனி வரும் காலங்களில், தற்போதைய குழந்தைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில், இடைநிலை கல்வி படிப்பை மாற்றி, ஆசிரியர்கள் பணிக்கு குறைந்தது பட்டப்படிப்பு உடன் பிஎட் தகுதி கட்டாயம் என்ற நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

தமிழகம் கல்வியில் மேலும் சிறக்க வேண்டுமானால் தமிழகஅரசு இந்த கல்வி ஆண்டிலாவத சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்…. நடவடிக்கை எடுக்குமா எடப்பாடி அரசு….

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article